தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்
Advertisement
ஊட்டி, அக்.14: நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை ஊட்டியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பிரேமலதா, குணசேகரன், பிரபாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் நாகராஜன் துவக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் குட்டி நிறைவாக பேசினார். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் நிர்மலா நன்றி கூறினார். பந்தலூர் வட்ட நிர்வாகிகள், கூடலூர் வட்ட நிர்வாகிகள், குன்னூர் வட்ட நிர்வாகிகள், குந்தா வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்துக் கொண்டனர்.
Advertisement