புதிய நிர்வாகிகள் தேர்வு
Advertisement
ஊட்டி,அக்.13: ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் திமுக., மாவட்ட துணை செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஊட்டி நகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தேர்தல் கடந்த வாரம் நடந்தது.இந்த தேர்தலில் தலைவராக பஷீர் தேர்வு செய்யப்பட்டார்.செயலாளராக ரமேஷ், துணை தலைவராக கார்த்திக், துணை செயலாளராக பிரவீன்,பொருளாளராக சசிகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் திமுக மாவட்ட துணை செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான ரவிக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சியில் ஊட்டி மேற்கு நகர செயலாளர் ரமேஷ்,மாவட்ட அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்க்ஹில் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், துணை அமைப்பாளர்கள் ஆட்டோ ராஜன், சசிகுமார், கோபால், ராமன், ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement