கோத்தகிரியில் மழையால் கடும் குளிர்
Advertisement
கோத்தகிரி, அக்.10: நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கட்டபெட்டு, கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
மழை பெய்து வந்ததால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. மேலும் மழையின் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளிரிலும் தங்களின் பணிகளை மேற்கொண்டனர்.
Advertisement