இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை கூட்டம்
Advertisement
பந்தலூர், அக்.7: பந்தலூர் அருகே சேரம்பாடியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி தனியார் மண்டபத்தில் முஸ்லீம் லீக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்தும், பணிகள் செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் அக்டோபர் 26ம் தேதி மாவட்ட மாநாட்டை ஒருங்கிணைப்பது குறித்தும் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லீம் லீக் இளைஞர் அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷிபு மீரான், தேசிய மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி ராஜன், இளைஞரணி தேசிய செயலாளர் நஜ்மா தப்ஷிரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement