வழிப்பறி வாலிபர் கைது
அவிநாசி, செப். 2: அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (39), டெய்லர். இவரது மனைவி செல்வராணி (37). இவர், கடந்த வாரம் அய்யப்பாளையத்தில் இருந்து துலுக்கமுத்தூர் குன்னத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் தடுத்துநிறுத்தி, செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து செல்வராணி அவிநாசி போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சூரிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்ததில், சேவூர் சூரிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரபாகரன் (30), தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ஒன்றரை பவுன் தாலிச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது.