மயங்கி விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு,அக்.31: ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் ஜடமுய் பகுதியை சேர்ந்த லபான் பாட்டியா (44). இவர், ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியில் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி வெட்டுக்காட்டுவலசு பகுதியில் நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதில், பின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், அவரது அறையில் விட்டனர்.
28ம் தேதி லபான் பாட்டியா மனநிலை பாதிக்கப்பட்டதை போல பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லபான் பாட்டியா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
