எல்க்ஹில் பகுதியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ஊட்டி, அக்.30: ஊட்டி எல்க்ஹில் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. தற்போது மழை பெய்யும் சூழலில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இப்பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
ஆனால், பொதுமக்கள் குப்பைகளை பிரித்து வழங்காமல் ஒன்று சேர்த்து வழங்குகின்றனர். இதனால் தூய்மை பணியாளர் பாதிக்கின்றனர். மேலும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் போது வழக்காமல் மற்ற சமயங்களில் பொது இடங்களில் கொட்டி சென்று விடுகின்றனர். இதனால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
Advertisement