கோழிக்கரை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கோத்தகிரி, அக்.30: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள சிறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, ஓடைகளில் இருந்து செல்லும் நீரானது கோழிக்கரை ஆற்றில் ஒன்றிணைந்து பவானிசாகர் அணையில் கலந்து சமவெளிப்பகுதியில் உள்ள விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக கோழிக்கரை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement