கீழ்குந்தா பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்பு
மஞ்சூர், அக்.30: நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட கொட்டரகண்டி, ஓணிகண்டி, கண்டிபிக்கை, கீழ்குந்தா கீழ்பகுதி, கெத்தை உள்ளிட்ட 11 முதல் 15 வரையுள்ள வார்டுகளில் சிறப்பு கூட்டங்கள் நேற்று நடந்தது. கூட்டங்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் கவுன்சிலர்கள் குமார், மாலினி, காஞ்சனா, மாடக்கன்னு, சண்முகன், அலுவலர்கள் முரளி, மார்கண்டேயன் மற்றும் ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.இதில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு, சாலைகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்வாய்களை துார்வாருதல், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளுதல், தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.