கால்ப்லிங்ஸ் சாலையில் காலில் காயத்துடன் நடமாடும் காட்டு மாடால் மக்கள் அச்சம்
ஊட்டி, ஆக. 30: ஊட்டி கால்ப்லிங்ஸ் சாலையில் காலில் காயத்துடன் வலம் வரும் காட்டுமாடால் விபத்து அபாயம் தொடர்கிறது. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் கால்ப்லிங்ஸ் சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டுமாட்டு ஒன்று காலில் காயத்துடன் சுற்றித்திரிகிறது.
Advertisement
இந்த காட்டுமாடு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளை தாக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்த காட்டுமாட்டை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும். அல்லது அதனை பிடித்து வேறு பகுதிகளுக்கு கொண்டுச் சென்று விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement