குன்னூர் அருகே குடியிருப்புக்குள் உலா வந்த சிறுத்தை சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பீதி
குன்னூர், செப். 27: குன்னூர் அருகே குடியிருப்புக்குள் உலா வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதியடைந்தனர். குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக போதிய உணவுகள் கிடைக்காமல் குடியிருப்பு பகுதிகளில் நோட்டமிடும் சிறுத்தைகள், உணவுகளை தேடி அங்குமிங்கும் அலைந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் பிருந்தாவன் குடியிருப்பு பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் கடந்த சில நாட்களாக மாயமாகி வருவதாக வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் உலா வந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிது இருந்தது.
தற்போது இந்த காட்சி வெளியான நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வளர்ப்பு நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை வனத்துறையினர் ஊருக்குள் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கைகள் வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.