அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்
ஊட்டி, ஆக. 27: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சிஎஸ்ஐ., சிஎம்எம்., பள்ளி மற்றும் காந்தல் புனித அந்தோனியார் பள்ளிகளில் நேற்று இத்திட்டம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷ்னர் வினோத் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
Advertisement
தொடர்ந்து, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ரவி, விஷ்ணுபிரபு, கஜேந்திரன், ரமேஷ், ப்ரியா, மேரி புளோரினா, கீதா மற்றும் செல்வராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Advertisement