அட்டகாச குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
பந்தலூர்,ஆக.21: நாயக்கன்சோலை கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்சோலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீப காலமாக குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
Advertisement
வீட்டின் கூரைகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று உணவு மற்றும் தின்பண்டங்களை தூக்கி செல்வது, குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்துவது, காய்கறிகளை தின்று சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement