விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
கூடலூர்,ஆக.21: கூடலூர் அடுத்த மரபாலம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் குமார்(22). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி இரவு 3 பயணிகளுடன் கள்ளிக்கோட்டை சாலை ஆமைக்குளம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நாடுகாணி பகுதியில் இருந்த வந்த சரக்கு லாரி மீது மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
Advertisement
அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேவிட் குமார் (22) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்வம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement