ஓடும் ரயிலில் பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு
பாலக்காடு, ஆக.20: புனே-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வாலிபர் மயங்கி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருச்சூர் ரயில் நிலைய போலீசார் வாலிபரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோழிக்கோடு மாவட்டம் பரூக் அடுத்த கருவந்துருத்தியை சேர்ந்த அனீஷ் (43) என்பதும், இவர் புனேவில் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement