புதர் சூழ்ந்த பந்தலூர் வருவாய் அலுவலகம்
பந்தலூர், செப்.18: பந்தலூர் வருவாய் ஆய்வாலர் அலுவலகம் அருகில் முற்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. பந்தலூர் பஜார் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் ஒரு பகுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாகவும் இருந்து வருகிறது. தினந்தோறும் வருவாய் அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
Advertisement
இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. பஜார் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் அமைந்துள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement