மிலாடி நபி ஊர்வலத்திற்கு இந்து கோயில் கமிட்டியினர் வரவேற்பு
கூடலூர், செப்.15: கூடலூர் பஜாரில் நடைபெற்ற மிலாடி நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்து கோயில் கமிட்டி அமைப்பினர் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். கூடலூர் பெரிய பள்ளிவாசல் கமிட்டி தலைவர் உன்னி மைதீன் தலைமையில் பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து மிலாடி நபி ஊர்வலம் துவங்கியது.
Advertisement
பழைய பேருந்து நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டனா பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது அங்கு தேவர் சோலை சாலை எஸ்எஸ் நகர் பகுதி பொதுமக்கள், இந்து கோயில் கமிட்டியினர் ஊர்வலத்தில் வந்தவர்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.
வினோத், செல்வபாரதி, கிருஷ்ணகுமார் மற்றும் ரபீக் அடங்கிய குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலம் தாலுகா அலுவலகம் வழியாக மீண்டும் பெரிய பள்ளிவாசல் பகுதியில் முடிவடைந்தது.
Advertisement