கோக்கால் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம்
ஊட்டி,செப்.15: ஊட்டி அருேக சோலூர் கோக்கால் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் ஊட்டி அருகே சோலூர் கோக்கால் பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
சோலூர் கோக்கால் அரசு உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜா,ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், கோக்கால் கிராம சமூக ஆர்வலர்கள் சிவகுமார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப் பாத்திலா, செவிலியர் சுமதி, மருந்தாளுனர் நவீன், நிர்வாக உதவியாளர் லாய்சான்,உதவியாளர் வினோத்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம், எடை, ரத்த சர்க்கரை அளவு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.
முகாமில் கோக்கால் மற்றும் கீழ் கோக்கால் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமிற்கு ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.