வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ஊட்டியில் காங். கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
ஊட்டி, ஆக. 15: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டியில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் இதேபோன்ற மோசடி நடந்துள்ளதாக அவர் புகார் தெரிவித்து உள்ளார்.
Advertisement
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ஊட்டியில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. காபி ஹவுஸ் பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் மகாத்மா காந்தி சிலை வரை நடந்த இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஊர்வலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement