வனப்பகுதியில் கனிம வளத்திருட்டு: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
ஊட்டி,செப்.13: நீலகிரி வன கோட்டம் ஊட்டி வடக்கு வனசரகம் முத்தநாடுமந்து காவல் பகுதிக்கு உட்பட்ட வென்லாக் டவுன் காப்புகாடு பழைய எச்பிஎப் நிறுவன பகுதியில் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து திருட்டுதனமாக மண் மற்றும் கற்களை உடைத்தது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் பிரதீப்குமார் (32),அஹ்மத்துல்லா (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
இச்சம்பவத்தில் தொடர்புடைய எச்பிஎப் பகுதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை தேடி வந்த நிலையில் நேற்று நாகராஜை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement