ஊட்டி தெற்கு ஒன்றியம், கீழ்குந்தா பேரூர் பாகநிலை முகவர் கூட்டம்
ஊட்டி, செப். 12: ஊட்டி தெற்கு ஒன்றியம், கீழ்குந்தா பேரூர் பாகநிலை முகவர்கள் கூட்டம் நடந்தது. ஊட்டி தெற்கு (மேற்கு) ஒன்றியம் மற்றும் கீழ்குந்தா பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாகநிலை முகவர்கள் பிஎல்ஏ., 2 கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, தேர்தல் பணி செயலாளர் மற்றும் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்த குறித்தும், தேர்தலின்போது பிஎல்ஏ., 2 முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு ஆகியோர் கலந்துக்கொண்டனர். முடிவில் கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.