குன்னூர் அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ஊட்டி, செப். 11: நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமை வகித்து, ஆண்களின் திருமண வயது 21, பெண்களுக்கு 18. இளவயது திருமணங்களை தவிர்க்க வேண்டும். கல்வி கற்க வேண்டிய வயதில் கல்வி கற்க வேண்டும்.
Advertisement
மேலும் போக்சோ சட்டத்தின் மூலம் சிறார் பாலியல் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து விளக்கினார். வழக்கறிஞர் மகேஷ்வரன், பெண்கள் வன்கொடுமை சட்டங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். மாவட்ட சமூக நல துறையை சேர்ந்த அலுவலர் கணேஷ், கல்லூரி முதல்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement