தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரி 3ம் நாளாக பாடந்துறையில் உண்ணாவிரத போராட்டம்

கூடலூர், ஆக.9: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். எல்லைகளில் அகழி மின்வேலி அமைத்து யானைகள் மீண்டும் ஊருக்குள் வராத வண்ணம் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் நேற்றும் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement

தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் திரளாக வந்து உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கூடலூர் டிஎப்ஓ வெங்கடேஷ் பிரபு, உண்ணாவிரதம் இருந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது டிஎப்ஓ, போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மக்கள் உரிமைக்குரல் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement

Related News