காந்தலில் நாட்டு நலப்பணி முகாம்
ஊட்டி, அக்.8: ஊட்டியில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி காந்தல் பகுதியில் நடந்தது. முகாமினை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். காந்தல் முக்கோணம் பகுதியில் நடந்த முகாமில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, குருசடி திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து புதர் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
Advertisement
மேலும், பள்ளி வளாகம் மற்றும் மேரிஸ் ஹில் பகுதியில் சிதறி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். நாட்டின் நிர்வாக அமைப்பு, மாவட்ட நிர்வாக அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் துணை கொண்டு குறும்படங்கள், பாடல்கள் ஒளிபரப்பி போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
Advertisement