வழி தெரியாமல் காட்டிற்குள் சிக்கிய வாலிபர் மீட்பு
பாலக்காடு, அக்.8: பாலக்காடு மாவட்டம் கிணாசேரியை அடுத்த தண்ணீர்பந்தலை சேர்ந்த கருணாகரன் மகன் அஜிலால் (27). இவர் நேற்று முன்தினம் வடக்கஞ்சேரி அருகேயுள்ள வீழுமலைக்கு தனியாக காட்டிற்குள் அத்துமீறி புதுந்து சென்றுள்ளார். காட்டிற்குள் சென்றவருக்கு திரும்ப வர வழி தெரியாமல் காட்டிற்குள் மாட்டிக் கொண்டு பரிதவித்துள்ளார்.
Advertisement
பின்னர் இரவு நேரம் நெருங்கிய நிலையில் அச்சமடைந்த அவர் அவசர உதவி போலீசாருக்கு தகவலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் ஆலத்தூர் ரேஞ்சு அதிகாரி சுபைர் மற்றும் பாரஸ்ட்டர் சலீம், பீட் பாரஸ்ட் அதிகாரி நாஷர் ஆகியோர் தலைமையில் வன காவலர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இரவு 9 மணியளவில் காட்டிற்குள் சிக்கிக் கொண்ட வாலிபரை மீட்டு அறிவுரைகள் வழங்கி விடுவித்தனர்.
Advertisement