மழையால் அலுவலகங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு
பாலக்காடு, ஆக. 7: திருச்சூர் மாவட்டம் ஷொர்ணூர், பழயணூர்ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை காரணமாக வீடுகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து அலுவலகப்பணிகள் பலமணிநேரம் தடைப்பட்டது. ஷொர்ணூர் மாநில அரசு நீர்வளப்பாசனத்துறை அலுவலகத்தில் கனமழை காரணமாக வெள்ளம் புகுந்ததால் அலுவலகப்பணிகள் பாதிக்கப்பட்டது.
மேலும், கனமழையால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை வெள்ளம், சாக்கடை தண்ணீர் ஆகியவை கலந்து தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளிலும், அலுவலகங்களிலும் புகுந்து பாதிப்பு ஏற்பட்டன. இதனால் அப்பகுதியில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது.