மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
பந்தலூர், ஆக. 6: பந்தலூர் அருகே பொன்னூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் நேற்று பெய்த கனமழைக்கு இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
பகுதி சுற்றுச்சுவர் அபாயகரமாக இருப்பதால் எந்த நேரத்திலும் அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு செய்து மாணவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.