பந்தலூர் பஜாரில் பயனில்லாமல் இருக்கும் வாட்டர் ஏடிஎம்மை அகற்ற கோரிக்கை
பந்தலூர், நவ.5: பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் அருகில் பயனற்ற நிலையில் உள்ள வாட்டர் ஏடிஎம்மை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் முன்பு வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்மால் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்து வருகிறது.
Advertisement
வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாக தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார்கள் தெரிவித்தும் இதுவரை அதனை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பந்தலூர் பஜாரில் பயனில்லாமல் இருந்து வரும் வாட்டர் ஏடிஎம்மை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement