தேயிலை வாரியம் சார்பில் பள்ளிகளில் தூய்மை பாரத நிகழ்ச்சி
கூடலூர், நவ. 5: கூடலூர் தேயிலை வாரியத்தின் பிராந்திய அலுவலகம் மூலம் கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் தூய்மை பக்வாடா-2025 எனப்படும் தூய்மை பாரத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி துப்புகுட்டி பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தேயிலை வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியாளர்கள் பள்ளி வளாகத்தையும், வகுப்பறைகளையும் சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி மாணவர்களுடன் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பள்ளியில் தூய்மை பணிகளுக்கு தேவையான குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய சுத்தம் செய்யும் பொருட்களை மேம்பாட்டு அலுவலர் அனுபம் பெஸ்போரா ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.