விவசாயி தற்கொலை
ஈரோடு,அக்.4: சென்னிமலை பசுவபட்டி பூச்சுகாட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன் சாலை விபத்து ஏற்பட்டு, தலையில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். விபத்தில் ஆறுமுகத்திற்கு சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு, அடிக்கடி நினைவிழந்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் ஆறுமுகம் தோட்டத்தில் இருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.