2 சிறுமிகள் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது
பாலக்காடு, நவ. 1: பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் அருகே சுடுவாலத்தூர் பகுதியச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (32). டிரைவர். இவரது, பக்கத்து வீட்டில் உள்ள 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் சோர்வடைந்து காணப்பட்டனர். இதை கவனித்த வகுப்பு ஆசிரியை இருவரையும் தனியாக அழைத்து சென்று ஏன் சோர்வாக உள்ளீர்கள் என கேட்டனர். அதற்கு, மாணவிள் எங்கள் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஸ்ரீநாத் எங்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். மாணவிகளின் பெற்றோர் ஷொர்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஸ்ரீநாத்தை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.