ஊட்டியை முற்றுகையிடும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி: ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பூஜை விடுமுறையும் வருகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வரும் நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
Advertisement
பொதுவாக இரண்டாம் சீசன்போது, இங்குள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களின் கட்டணங்கள் உயர்த்தப்படும். எனினும், இதனையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூஜை விடுமுறையை கொண்டாட ஊட்டி வருவதற்காக லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களை புக்கிங் செய்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை வரவேற்க அனைத்து ஓட்டல், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர்.
Advertisement