ஒரசோலையில் உறியடி திருவிழா
கோத்தகிரி: கோத்தகிரியில் படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா கொண்டாடப்பட்டது. கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
Advertisement
இந்நிலையில் இந்த ஆண்டு ஒரசோலை, தாந்தநாடு, கன்னேரிமுக்கு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடைபெற்று, கிராமம் முழுவதும் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
Advertisement