மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
பாலக்காடு: காந்தி ஜெயந்தி, ஆங்கில முதல் தேதியை முன்னிட்டும் கேரள மாநில அரசு மதுபான கடைகள் மூடப்படுகிறது. இந்நிலையில், பாலக்காடு டவுன் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ஒலவக்கோடு ரயில் நிலையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அரை லிட்டர் கொண்ட 37 பாட்டல் மது பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
மன்னார்க்காடு அருகே காஞ்ஞிரம் பகுதியைச் சேர்ந்த சுதீப் (40), தீபேஷ் (39) என்பதும், இவர்கள் மாநிலஅரசு விடுமுறை நாட்களில் அரசு மதுக்கடைகளில் இருந்து மது வாங்கி அதிகவிலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
Advertisement