குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 119 மனுக்கள் பெறப்பட்டன
ஊட்டி, செப். 30: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 119 மனுக்கள் பெறப்பட்டன. ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன், சாலை வசதி, கலைஞர் உரிமைத்தொகை வழங்கக்கோரி 119 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கலெக்டர் பேசுகையில்,“பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார். மேலும், தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்துவரும் நிலையில், மக்கள் குறைதீர்க்கும் முகாம்களுக்கு வரும் மக்களின் கூட்டம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.