அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் கீழ்நாடு காணி சாலையை சீரமைக்க கோரிக்கை
Advertisement
கூடலூர், அக்.29: கூடலூரில் இருந்து நாடு காணி கீழ்நாடு காணி வழியாக கேரள மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நாடு காணி துவங்கி தமிழக எல்லை வரையுள்ள சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த சில வருடங்களாக உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் இன்டர் லாக் கற்கள் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் பாறைப்பொடி கொட்டப்பட்டு பள்ளங்கள் மூடப்பட்டன. எனினும் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் தொடர் மழையில் மீண்டும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவானதால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
Advertisement