ஏணியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி
Advertisement
பாலக்காடு, அக். 28: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு கரிங்கல் அத்தாணியைச் சேர்ந்த முனீர்-ஷகனா தம்பதியின் மகன் மஷில்முகமது (7). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த அக்.23ம் தேதி பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ஏணியில் ஏறி விளையாடியபோது, கால்தவறி மாணவர் கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த மாணவரை உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு பெரிந்தல்மன்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுவன் மஷில்முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement