மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது
Advertisement
பாலக்காடு, செப். 22: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை பேலீசார் கைது செய்தனர்.
மன்னார்க்காடு அருகே சங்கலீரியை சேர்ந்த அஷீஸின் மகன் முகமது ரபீக் (28). இவர் அப்பகுதியிலுள்ள 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிக்கூடம் சென்று வரும் போது பைக்கில் சிறுமியை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால், போலீசாரிடம் புகார் தெரிவிப்பேன் என சகதோழியர்களுடன் சிறுமி மிரட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர் முகமது ரபீக் காரில் சிறுமியின் வீட்டிற்கு அத்துமீறி சென்று யாரும் இல்லாத நேரத்தில் பலாத்காரம் செய்து தப்பியுள்ளார்.
இது தொடர்பாக சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்க மன்னார்க்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
Advertisement