சாலையோரம் கிடந்த கஞ்சா சாக்லேட்கள்
Advertisement
ஈரோடு,செப்.22: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட கொல்லம்பாளையம்,பழைய பூந்துறை ரோடு, சென்னிமலை ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் சில சாக்லேட்டுகள் கிடந்தது தெரிய வந்தது.
போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவை கஞ்சா சாக்லேட் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மொத்தம் 210 கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement