வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
பந்தலூர், செப்.22: பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகளிடமிருந்து கூடலூர், பந்தலூர் பகுதி மக்களுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த கோரியும், நிலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும், மின் இணைப்பு இல்லாத வீட்டுளுக்கு மின் இணைப்பு வழங்க கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் அசரப் துவக்கிவைத்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் பிதர்காடு, மாங்கோடு, பாக்கனா, நெல்லாக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement