ஊட்டிக்கு கன மழை எச்சரிக்கை ஆடிப்பெருக்கையொட்டி கல்பாத்தி ஆற்றின் படித்துறையில் கன்னிமார் பூஜை
பாலக்காடு, ஆக. 5: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமார் பூஜைகள் செய்து நேற்று முன்தினம் வழிப்பட்டனர்.
காசியில் பாதி கல்பாத்தி என்ற விளங்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகேயுள்ள பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துரைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமாரியர்களுக்கு விஷேச பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
கன்னிமார தெய்வங்களுக்கு பலகாரவகைகள், பழவகைகள், இனிப்பு, கார பண்டங்கள், பாயாசம் ஆகியவை படைத்து தங்களது முன்னோர்களுக்கும், கன்னிமார்களுக்கும் பூஜைகள் செய்து வழிப்பட்டனர். காசியில் பாதி கல்பாத்தியில் விசாலாட்சி விஸ்நாதர் கோவில் அருகேயுள்ள கல்பாத்தி ஆற்றில் ஆடி பெருக்கை முன்னிட்டு குடும்பத்தினருடன் சிறுவர் சிறுமியர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கும், கன்னிமார்களுக்கும் வழிப்பாட்டு பூஜைகள் செய்தனர்.