குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம்
Advertisement
குன்னூர், டிச. 2: குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்கும் வகையில் மண் ஆணி திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுத்து மக்களை காக்க மண் ஆணி திட்டம் என்ற நவீன தொழில் நுட்பத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து, 2,000 மீட்டர், அதாவது 6,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.
குன்னூர்- ஊட்டி- கோத்தகிரி- மேட்டுப்பாளையம் போன்ற சாலைகளில் நிலச்சரிவை தடுக்க, புதிய தொழில்நுட்பமான மண் ஆணி அமைத்து, நீர் விதைப்பு முறை, ஜியோ கிரிட் முறையில், மண்ணின் உறுதித்தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ளனர்.
Advertisement