கண்ணங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய டிராக்டர்
சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கண்ணங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய டிராக்டருக்கான சாவியை கலெக்டர் ஆஷா அஜித் சங்க செயலாளரிடம் வழங்கினார். அப்போது மண்டல இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர்/செயலாட்சியர் ப.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேளாண் இயந்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.12,26,671. இதில் மானியம் ரூ.8,00,000 ஆகும். கூட்டுறவு சங்கத்தின் பங்களிப்புத் தொகை ரூ.4,26,671 ஆகும்.
Advertisement
Advertisement