புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு
தேன்கனிக்கோட்டை, ஜூன் 16: கெலமங்கலம் ஒன்றியத்தில், 150 பள்ளிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் நேற்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை வட்டார கல்வி அலுவலர்கள் மணிகிருஷ்ணன், லோகேஷா, பால்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அக்கொண்டப்பள்ளி, அஞ்செட்டி துர்கம், ஜக்கேரி, ஏ.புதூர், சின்னட்டி, பள்ளி தலைமை ஆசியர்கள் தன்னார்வலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு தேர்வு நடத்தினர்.