புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
ராஜபாளையம், செப்.7: ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை, சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், நகராட்சி சுகாதார அலுவலர்கள் பரிதாவாணி, ராஜபாண்டியன், அப்துல்ரஹீம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சனா கார்த்தி மற்றும் நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement