வீட்டை விட்டு வெளியேறிய நாங்குநேரி சிறுவன் நெல்லை ரயில் நிலையத்தில் மீட்பு
விகேபுரம், ஜன.4: வீட்டை விட்டு வெளியேறிய நாங்குநேரி சிறுவன் நெல்லை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.நாங்குநேரி பாரதிநகர் இலங்குளம் பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் சதீஷ் (16) என்பவன் நேற்று முன்தினம் பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து காணாமல் போன தனது மகனை மீட்டு தரக்கோரி அவனது பெற்றோர் விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நெல்லை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் சிறுவனை மீட்டு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவனது பெற்றோர் வசம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்.