தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் ஆர்எம்கே பள்ளி மாணவர்கள் தேர்வு
Advertisement
இதில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே. ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சாய் கௌசிக் மற்றும் சாய் மகேந்திரா தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்க உள்ளது. சாதனை படைத்த மாணவர்களை பள்ளிக்கூட தாளாளர் யலமஞ்சி பிரதீப், பள்ளி முதல்வர் சப்னா சங்கலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி தமிழக அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement