புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது
பரமத்தி வேலூர், அக்.29: நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் டோல்கேட் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் ராசப்பன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்குள்ள இட்லி மாவு விற்பனை செய்யும் கடை மற்றும் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. இதுதெடர்பாக கீரம்பூர் அருகே புலவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement