கோயில் நிலத்தில் பனைவிதைகள் நடவு
குமாரபாளையம், அக்.29: குமாரபாளையம் சண்முகவேலாயுத சுவாமி கோயில் நிலத்தில் 2500 பனை விதைகள் நடவு பணிகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சண்முக வேலாயுதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2500 பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பனைவிதை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனா, விடியல் பிரகாஷ், கல்லூரி முதல்வர் பாலமுருகன், பஞ்சாலை சண்முகம், அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர். விதைகள் நடவு செய்யப்பட்ட விபரங்களை அரசின் உதவி செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement