திட்டப்பணிகள் தொடக்க விழா
நாமக்கல், ஆக.29:ஆண்டாபுரம் அரசு பள்ளியில், புதிய திட்டப்பணியை எம்பி மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார். மோகனூர் ஒன்றியம், ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் நவலடி, கொமதேக தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, அதிகாரிகள், பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement